இந்தோனேசியாவில் 11 முறை நிலநடுக்கம்… 25 அடிக்கு எழுந்த சுனாமி அலைகள்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஒருவர் உயிரிழந்தார்.

இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் இன்று (ஏப்ரல் 2) அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வடக்கு சுலவேசி பகுதியில் கட்டிடங்கள் இடிந்தன. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக நார்த் மினாஹசாவில் 75 செ.மீ. (2.5 அடி) வரை சுனாமி அலைகள் உருவானதாக இந்தோனேஷியாவின் பிஎம்கேஜி புவியியல் நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்த் சுலாவேசி மாநிலத்தின் மனாடோ நகரில் ஒரு கட்டிடம் விழுந்த போது ஒருவர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நார்த் சுலாவேசியாவின் கடலோர நகரமான பிடுங் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டதாக இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹவாய் ஆஸ்தியனில் அமைந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முதலில், நிலநடுக்க மையத்திற்கு 1,000 கிலோமீட்டர் (621 மைல்கள்) சுற்றளவில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா கடலோரங்களில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்தது. இந்தோனேஷியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் சிசிடிவி காணொளிகளில் கட்டிடங்கள் கடுமையாக நடுங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டது.இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தோனேசியா சுமார் 11 முறை குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *