
சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவி சவிதா ஷான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் பிரபல பாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள மதுபான விடுதிக்குள் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் றித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடத்திய பதிலடியில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரும் சுட்டுக் கொன்றனர்.
ஆஸ்டின் காவல் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, வாகனத்தில் வந்து மர்மநபர் பார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு, துப்பாக்கியுடன் இறங்கி அங்கிருந்தவர்கள் மீது தொடர்ந்து சுட்டுள்ளார். உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இரட்டை பட்டம் பெற்ற சவிதா ஷான்(21) என்ற மாணவியும், ரைடர் ஹாரிங்டன் (19) மற்றும் இன்னொருவர் உயிரிழந்தனர். மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடடு நடத்தியவர் என்டியாகா தியாக்னே(53) என்று கண்டறியப்பட்டுள்ளது. செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட தியாக்னே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருவதுடன் அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வரும் இந்த நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருப்பதால், இந்த தாக்குதல் பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.
தியாக்னேவிற்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், பிபிஐ அதிகாரிகள் நடத்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத செயலாக கருதி விசாரித்து வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தியாக்னே தாக்குதலின் போது ஈரான் தேசிய கொடி பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து இருந்ததுடன், அல்லாவின் சொத்து என்று எழுதப்பட்ட அங்கியை அணிந்து இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



