அதிகாலையில் பரபரப்பு… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் அந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டியதாக கூறி கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யும் நிலை தொடர்கிறது. இதனால் மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தன தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அங்கு வந்தனர். இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறிய அவர்கள் விசைப்படகை பறிமுதல் செய்ததுடன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்து செய்தனர். அவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *