
சவுதியின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 அமெரிக்கா விமானங்கள் சேதமடைந்தன.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க அமெரிக்கா மத்திய கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை நிறுத்தியுள்ளது இந்த விமானங்கள் சவுதி அரேபியாவில் உள்ள சுல்தான் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் 5 விமானங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த விமானங்கள் சேதமடைந்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சேதமடைந்த அந்த விமானங்களை சீர் செய்யும் பணியும் நடைபெற்றுவதாகவும் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க அமெரிக்கா நிறுத்தியுள்ள கேசி-135 ராணுவ விமானங்கள் வானிலேயே எரிபொருள் நிரப்பும் தன்மை கொண்டவை. மேலும் இந்த விமானங்கள் தரையிறங்காமலே தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். இப்படிப்பட்ட 100 விமானங்களை சவுதி அரேபியாவில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அந்த விமானங்களை குறிவைத்து தான் ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியள்ளது. இந்த தாக்குதலை ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் எதிர் தாக்குதல்களை மேற்கொள்ளும்போது, மேலும் பல அமெரிக்கப் படையினர் உயிரிழக்க நேரிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முன்னதாக
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் போரில், சுமார் 150 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மார்ச் 12-ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.



