
தமிழக தலைமைச் செயலகம்
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசு இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள ஆணையில், ” பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் கே.கோபால் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த.சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த எஸ்.மாலதி ஹெலன், பதவி உயர்வு பெற்று அதே செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த கு.ரவிகுமார், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திரசேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு வணிகவரித் துறை இணை ஆணையராக நே.பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



