
திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளருமான ப.கவிதா குமார் எழுதும் ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’ இசைத்தொடர் மதுரை செய்தி இணைய தளத்தில் https://maduraiseithi.in/ நாளை தொடங்குகிறது.
தமிழ் ஊடக உலகில் மாற்று ஊடகமாக மலர்ந்துள்ள மதுரை செய்தி https://maduraiseithi.in/ இணைய தளம், செய்தி ஊடகம் என்ற தளத்தை தாண்டி இலக்கிய மணம் பரப்பும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ப.கவிதா குமார் எழுதும் ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’ இசைத்தொடர் மதுரை செய்தி (https://maduraiseithi.in/) இணைய தளத்தில் நாளை (மார்ச் 15) துவங்குகிறது. பக்தி மணம் கமழும் பாடல்களை எழுதிய கவிஞர்களை அறிமுகம் செய்யும் மனதை மயக்கும் இசைத்தொடர் நாளை முதல் ஒவ்வொரு வாரம் ஞாயிறன்று உங்கள் ( https://maduraiseithi.in/) மதுரை செய்தி இணையதளத்தில் படிக்கலாம்.



