
கொலம்பியா ராணுவ விமான விபத்து
கொலம்பியாவில் ராணுவ விமானம் வயல் வெளியில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
கொலம்பியாவின் புட்டுமாயோ மாகாணத்தில் உள்ள பியூர்ட்டோ லெகுய்சாமோ விமான நிலையத்திலிருந்து 128 பேருடன் ‘ஹெர்குலிஸ் சி-130’ ரக ராணுவ விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. அத்துடன் அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 115 ராணுவ வீரர்கள், 11 பணியாளர்கள் மற்றும் 2 காவல்துறையினரில் 66 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றதோடு, காயமடைந்த வீரர்களைத் தங்களின் வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ராணுவத்தினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாயமான 4 வீரர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் இரங்கல்
இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, ராணுவ விமானங்களை நவீனப்படுத்தும் தனது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டினார்.
பொதுமக்களுக்கு நன்றி
தளபதி ஹியூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் பாரெட்டோ கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, இந்தத் துயர விபத்தின் விளைவாக, எங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 66 வீரர்கள் உயிரிழந்தனர், தற்போதைய நிலையில், இது ஒரு சட்டவிரோத ஆயுதக் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கான எந்தத் தகவலோ அல்லது அறிகுறிகளோ எங்களிடம் இல்லை. ” என்று பாரெட்டோ மேலும் தெரிவித்தார்.,” என்று அவர் கூறினார். “இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த புவேர்ட்டோ லெகுயிசாமோ மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், கொலம்பியத் தொலைக்காட்சி நிலையமான ஆர்சிஎன்னிடம் கூறினார்.



