மாநிலங்களவை தேர்தல்… அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணி ராமாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் மொத்தமுள்ள நான்கு இடங்களில் திமுக 2, காங்கிரஸ் 1, தேமுதிக 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன. அதேபோல் அதிமுக கூட்டணியில் அதிமுக1 , பாமக 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். , மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் தம்பிதுரைஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *