திருப்பரங்குன்றத்தை குறிவைக்கும் பாஜக: மோடி வருகையால் உற்சாகம்!

பிரதமர் மோடி

திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலில் மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பேச்சுவார்த்தை, வாக்குறுதி என பிஸியாக உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பிடித்துள்ளது. இந்த முறை மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அந்த கட்சி விரும்புகிறது. ஆனால், தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அத்தனை தொகுதிகளைத் தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், மார்ச் 1.-ம் தேதி மதுரையில் தேசியஏற்கெனவே கார்த்திகை தீப பிரச்னை உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மோடி வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்பு படையினரும், மதுரை போலீஸாரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அடுத்த நாள் (மார்ச் 1) சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *