Category உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 20 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல் (கோப்பு படம்) ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்கள் மீது இன்று (பிப்ரவரி 22) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஒரு பள்ளி மற்றும் வீடுகளைத் தாக்கி, டஜன் கணக்கானவர்களைக் கொன்று காயப்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதகாப்பு அமைச்சகம் தெவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தங்குமிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சமீபத்திய இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மற்றும் வடமேற்கு எல்லை மாவட்டங்களான பஜௌர் மற்றும் பன்னுவில் நடத்தப்பட்ட வன்முறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் ஆயுமேந்திய குழுக்களைச் சேர்ந்த முகாம்கள் மற்றும் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது. நங்கர்ஹார் மற்றும் பாக்டிகாவின் எல்லை மாகாணங்களில் ஒரு மதப்பள்ளி மற்றும் குடியிருப்பு வீடுகளை பாகிஸ்தான் தாக்கியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல் (கோப்பு படம்) ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக…

அடங்க மறுக்கும் டிரம்ப்- அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிப்பு

அடங்க மறுக்கும் டிரம்ப்... அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,…

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: பிஎன்பி 212 இடங்களில் முன்னிலை

வங்கதேச நாடாளுமன்றத்

பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான். வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 212 இடங்களைக் கைப்பற்றி வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி)…