‘உங்களை நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு’:நடிகர் விஜய்க்கு எதிராக சீறிய பிரபலம்!

திருமண விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷாவுடன், தவெக தலைவர் விஜய் திருமண விழாவில் பங்கேற்றது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

விவகாரத்து வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதற்காக பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சங்கீதா தனது மனுவில், தனது கணவர் விஜய்க்கு, நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். சங்கீதா குறிப்பிட்ட நடிகையுடன் விஜய் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், விஜய் இதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

திருமண விழா
பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழா திருவான்மியூரில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய், நடிகை த்ரிஷாவுடன் வந்தார் விஜய் பட்டுச்சட்டை, பட்டு வேட்டியிலும், நடிகை, த்ரிஷாவும் அதே நிறத்திலான பட்டுப்புடவை அணிந்து பங்கேற்றார். இவர்கள் இருவரும் திருமண தம்பதியினருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். விஜய்க்கும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், நடிகை த்ரிஷாவுடன், தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு அவரது ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷாவை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில், திரைப்பட விமர்சகரும் விஜய் ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி, விஜய்யின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல விஜய் அண்ணா ! நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு – அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும் ! இத யோசிக்க முடியலேன்னா , மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க ? சரி இல்ல ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது சரியில்லை
இதே போல நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான நடிகை சனம் ஷெட்டியும், த்ரிஷாவுடன், விஜய் திருமண விழாவில் பங்கேற்றதை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது சரியான வழி இல்லை. மனைவியின் துயரத்தை இப்படி புறக்கணிக்க முடியாது. நீண்ட காலமாக ரசிகையாக இருக்கும் ஒருவராக இந்த நேரத்தில் இதைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *