தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததா?: நயினார் நாகேந்திரன் பதில்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

தேதி அறிவித்த பின்னர்தான் தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தற்போது வரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும். தேர்தலுக்குமுன் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்பதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சிக் கண்டுள்ளது என்ற முதலமைச்சர் பேசுகிறார். எந்தெந்த துறைகள் என்றுக் கூறினால் கேட்கலாம். அனைத்து வகையிலும் இன்று தமிழ்நாடு தாழ்ந்து போயுள்ளது. கையில் புத்தகம் வைத்திருக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது. 2 வயது குழந்தைமுதல் வயதான பெண்கள்வரை நடமாட முடியவில்லை இன்று. தேசிய மகளிர் ஆணையம் 50 சதவீத பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு எனக் கூறியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது தான். அதற்காகத்தான் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். பண பலம், அதிகார பலத்தை அனைத்து இடத்திலும் கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட மக்கள் பலம்தான் பெரிது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும்.” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *