
எடப்பாடி பழனிசாமி
தொகுதி பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தொகுதிப்பங்கிடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை என அனைத்து கட்சிகளும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கி விட்டன. ஆனால், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை எப்போது துவக்கும் என கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.
மதுரையில் நேற்று நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு வந்த தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) டெல்லி செல்கிறார். காலை 10.45 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தொகுதிப்பங்கீடு குறித்து இருவரும் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



