புதுச்சேரியில் திமுக பார்முலா தான்: கிரீஷ் சோடங்கர் கறார்!

தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” புதுச்சேரியில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், மூத்த தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.

தமிழகத்தில் திமுகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு திமுகவுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும். கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.

புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் ” என்றார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று வலியுறுத்தினர். ஆனால், ஆட்சியில் பங்கு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார். இதனால் தமிழ்நாட்டில் திமுக பார்முலாவை புதுச்சேரியில் காங்கிரஸ் கடைபிடிக்கும் என்று கூறுவதன் மூலம் திமுகவுக்கு ஆட்சியில் பங்கு இல்லை என்று கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *