அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுகவினர்- விருப்பமனு இன்று முதல் விநியோகம்!

சென்னை அண்ணா அறிவாலயம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று (பிப்ரவரி 20) முதல் விநியோகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும். இந்த மனுவை மார்ச் 2-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். மேலும், விண்ணப்பப் படிவத்தை ரூ.1000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *