
ஆ.ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேட்டை யார் செய்தது என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ ராசா இருந்தார். அப்போது அலைக்கற்றை ( 2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட பலர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் இரண்டு வழக்குகளையும், அமலாக்கத்ததுறை ஒரு வழக்கையும் பதிவு செய்திருந்தது.
இவ்வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் 2017-ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து தொடரப்பட்டிருக்கக்கூடிய அந்த வழக்கிலுடைய விசாரணையும் மனுவுக்கு ஏற்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்,. திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்த போது, தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஆ.ராசா பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறையில் இருந்த போது தன்னை யாராவது வந்து பார்த்தார்களா என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், “திமுகவில் இருந்து ஒரு எம்எல்ஏ வந்திருப்பாங்களா?, ஒரு எம்.பி வந்திருப்பாங்களா? ஒரு கட்சிக்காரங்க வந்திருப்பாங்களா? நான் உள்ள போய் இரண்டு மாசம் கழிச்சு கனிமொழி உள்ள வருது. அதுவரைக்கும் எத்தனை பேர் வந்து என்னை பார்த்தார்கள்? என் மனநிலைமை ஜெயிலுக்குள்ள எப்படி இருந்துருக்கும்? என் வீட்டுல ஏதாவது எடுத்தார்களா? கலைஞர் டி.விக்கு தான் போச்சு பணம்? அதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல. என் வீட்டுல ஏதாவது சிபிஐ எடுத்தானா? யாரு என்னைப் பாக்க வந்தீங்களா? கனிமொழி சிறைக்கு வந்த பிறகு படையெடுத்து அனைத்து அமைச்சர்களும் வந்தாங்க. எனக்கு தெரியாதா? ஆனால், அந்த இண்டு மாசத்துல என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? நான் ஃபஸ்ட் ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்?. கனிமொழி அரெஸ்ட்டான பிறகு அழகிரி ஒரு நாள் வராரு, வந்து கலைஞர் டி.விக்கு எல்லாத்தையும் வாங்கி கொடுத்தது ஸ்டாலினாமே. நீயும் கனிமொழியும் எதுக்கு ஜெயில்ல இருக்கீங்க ? ஸ்டாலின் தான் செஞ்சாருன்னு சொல்லி அப்ரூவராகி வெளிய வர வேண்டியது தானே எனக்கூறினார் என்று பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் ஆ.ராசா ஆடியோ வெளியானதால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



