தவெகவை புறக்கணித்த டாக்டர் ராமதாஸ்- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

எந்த வாகனத்தில் ஏறப்போகிறோம் என்பது பிப்ரவரி 28-ம் தேதி தெரியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமகவின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் எப்படிப் பணியாற்றுவது, எந்த மாதிரி யுக்திகள் எனக் கேட்டு, எல்லாரும் அதன்படி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கான ஒரு கலந்தாய்வுக் கூட்டம் தான் இது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இன்றைக்கே முடிவு செய்ய முடியாது. ஏனெனில் அதற்கான களம் சரியாக அமையவில்லை. அதனால நேரம் வரும்போது உங்களுக்குத் தெரியாமலா நடக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா, இருக்காதா? என்று செய்தியாளர்கள் வினா எழுப்பியதற்கு “ இருக்கும்.. இருக்கும்.” என்று பதிலளித்த டாக்டர் ராமதாஸ், “. பிப்ரவரி 28-ம் தேதிக்குள் எந்த தேர்தல் வாகனத்தில் ஏறப் போகிறோம்.” என்று. தெரியும் என்றார். இதன் மூலம் தவெக கூட்டணியில் பாமக இணையாது என்பதை டாக்டர் சூசகமாக சொல்லியுள்ளார் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *