நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் பணியிட மாறுதல் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு ஆண்டுதோறும் பணியிட பொது மாறுதல் தமிழக அரசின் அரசாணை எண் 10 நாள் 7.1.94 ன்படி வழங்க வேண்டும் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பொறியாளர்கள் பணியாற்ற கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் 7ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கபடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனை‌ தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் இரு நீதிபதி அமர்வுக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பணியிட மாறுதலில் பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *