‘ தைரியம் இருந்தா என்கிட்ட நேரடியா மோதுங்க’… விஜய்க்கு நடிகை ஜூலி சவால்!

நடிகை ஜூலி. தவெக தலைவர் விஜய்

விஜயண்ணா, உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன் என்று நடிகை ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு காளையை ஒரு சிறுவன் அடக்கியது குறித்த ஒரு குட்டிக்கதையை கூறினார். இதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமடைந்து, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஜூலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் முதலில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

நடிகை ஜூலி

அந்த வீடியோவில், “அண்ணா உங்கள் கட்சியில் இருப்பதில் பாதி பேர் மைனர் பசங்க. அவர்கள் நாங்களும் புல்லுக்கட்டை காட்டி ஜல்லிக்கட்டு காளையை அடக்க போகிறோம் என்று நினைக்க போய் ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன செய்வது? 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும், 500 ஆக்கி விடாதீர்கள்” என்று விமர்சித்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராக தவெகவினர் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

தவெக தலைவர் விஜய்

இந்த நிலையில், அடுத்த வீடியோவை ஜூலி வெளியிட்டுள்ளார். அதில், “விஜயண்ணா, உங்க வேலூர் பரப்புரை பார்த்து அதில் எதுவும் இல்லை என்ற ஆதங்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டேன். உங்களுடைய ரசிகர்கள் ஆமாம், அவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். ஏனென்றால் இன்னும் அரசியல் வயப்படவில்லையே. அவர்கள் அனைத்து சோஷியல் மீடியா சைட்களிலும் என்னை வந்து கடிச்சு வச்சிட்டு இருக்கிறார்கள்.

இந்த மைனர் பசங்களிடம் இருப்பது முக்காவாசி பேக் ப்ரொஃபைல் மட்டும்தான். அதைவைத்துத்தான் என்ன மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பயந்து நான் அந்த வீடியோவை டெலிட் பண்ணவும் மாட்டேன். என் கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்தவங்களையும் மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜயண்ணா, உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன். இல்லை என்றால் என் ஆபிஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் அவர்களை விட்டு விடுங்கள்.

ஓ.. நீங்கள் பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்களா? நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன். என்னைத் திட்டினால் என்னை திட்டுவது மாதிரிதான். மக்களைத் திட்டுன மாதிரி எல்லாம் யாரையும் உள்ள இழுத்து போடமாட்டேன். ஒரு பெண்ணிற்கு முக்கியமாக சோஷியல் மீடியாவில் எவ்வளவு மரியாதையும், எவ்வளவு மதிப்பும் எவ்வளவு பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை அந்த வீடியோ கீழ் இருக்கும் கமெண்ட் செக்சனில் டைம் இருந்தால் படித்து பாருங்கள். நன்றி அண்ணா” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *