
கொங்குநாடு மக்கள் கட்சி, திமுக இடையே தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த நிலையில், திமுகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று (மார்ச் 13) கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரனும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கொமதேகவிற்கு இந்த தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு திமக கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



