லாஸில் துவங்கிய தவெக வேட்பாளர் பட்டியல்:யார், யாருக்கு எந்த தொகுதி?

தவெக தலைவர் விஜய்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 30 வேட்பாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில் 2 பேர் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், 4 பேர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் முதல் பெயராக லாஸ்பேட்டையில் வி..சாமிநாதன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில பாஜக மாநில தலைவராக மூன்று முறை பணியாற்றியவர் வி. சாமிநாதன். அத்துடன் பாஜகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நியமன எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார். 2021-ம் ஆண்டு தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதனிடம் தோல்வியைத் தழுவினார். பின்னர் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தற்போது அவர் லாஸ்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளராக களமிங்கியுள்ளார்.

இவரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:
காளப்பாக்கம் (27) – K.A.U. அசனா
நெடுப்பாக்கம் (22) (தனி) – L. பெரியசாமி
திண்டிவனம் (2) (தனி) – AK. ராம் சரவணன் குமார்
முதியார்பேட்டை (13) – J. பிரகாஷ் குமார்
பாணி (23) – N. தனவேலு
ராஜா பவன் (14) – V.J. சந்திரன்
ஓலம்பம் (15) – S. அசீவா
முத்திரை (6) – S. சகியாலன்
அறியாங்குப்பம் (19) – S. குமரவேல்
மணவேலி (20) – B. இராமு
வில்லியனூர் (5) – R. ரமேஷ்
முத்தையர்பேட்டை (18) – N. மணிபாலன்
மண்ணாடிப்பட்டு (1) – K. பார்த்தசாரதி
ஒழுகான்பேட்டை (16) – S. மரிய பிரான்சிஸ்
மாங்கலம் (4) – M.K. சத்யா
காரைக்கால் நகரம் (10) – Dr. R. ரூபன்
நெளலூர் (17) – S. லோகநாதன்
சித்தாபேட்டை (12) – D. சக்திகுமார்
இந்திரா நகர் (8) – S. முருகன்
கதிர்காமம் (7) – R. ஜெயந்தி
ஊளடு (3) (தனி) – S. சரவணவா
தட்டாஞ்சாவடி (9) – M. பன்னீர்செல்வம்
நெரும்பம் (21) (தனி) – V. தமிழ்ச்செல்வன்
நெடுங்காடு (24) (தனி) – P. குமார்
திருநள்ளாறு (25) – A. ராஜா முரளிதரன்
காரைக்கால் வடக்கு (26) – A. செல்வகுமார்
நெஹ்ரூ நகர் – T.R. பட்டணம் (28) – G. கண்ணன்
மாகே (29) – M. பிரிஜேஷ்
ஏனம் (30) – A. தேபார் ராஜ்

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியதன் மூலம் தவெக தனித்து தான் போட்டியிடுகிறது என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *