
எடப்பாடி பழனிசாமியுடன் டாக்டர் சரவணன்.
மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.
தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு அந்த கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி அதிமுக தரப்பில் முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார் இதில் மதுரை வடக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளராக உள்ளார்.
மதுரை மேலூர் தொகுதியில் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பி.பெரியபுள்ளான்(எ)செல்வம், மதுரை கிழக்குத் தொகுதியில் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாங்குளம் கே.மகேந்திரன், சோழவந்தான் தனித்தொகுதியில் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சி.மாணிக்கம்,. உசிலம்பட்டி தொகுதியில் அமைப்பு செயலாளர் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



