மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டி…வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தனிச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக தொகுதி பங்கீட்டு குழு அமைத்துள்ளது. அந்த குழுவில், ஆடிட்டர் அர்ஜூனராஜ் (அவைத் தலைவர்), மு.செந்திலதிபன் (பொருளாளர்), சு.ஜீவன் (உயர்நிலைக் குழு உறுப்பினர்), வி.சேஷன் (தேர்தல் பணிச் செயலாளர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் திமுகவுடன் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநிலங்களவை ஒன்று ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் மதிமுக பேச்சுவார்த்தைக்குழு வலியுறுத்தியது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (பிப்ரவரி 28) சந்தித்தார். இதையடுத்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதிமுகவின் சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அதில், கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அத்துடன் இந்த முறை மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *