முடுவார்பட்டி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் பூப்பல்லக்கு திருவிழா கோலாகலம்!

முடுவார்பட்டி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் பூப்பல்லக்கு திருவிழா

வாடிப்பட்டி அருகே உள்ள முடுவார்பட்டி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் பூப்பல்லக்கு திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மதுரை வாடிப்பட்டி வட்டம், முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீகாட்சியம்மன் கோயில் உள்ளது. அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள
இந்த கோயில் முடுவார்பட்டி, ஆதனூர், தேவசேரி, அழகாபுரி, லிங்காவடி, வாவிடமருதூர், கோவிலூர், மாவுத்தம்பட்டியைச் சேர்ந்த கோவிலார்களுக்கு பாத்தியப்பட்டது. இந்த கோயில் திருவிழா கடந்த 6-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 16-ம் தேதி கொடியேற்றுதல், 18-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதல், 19-ம் தேதி குமாரம் புறப்படுதல், 20-ம் தேதி தைல பூஜை, 21-ம் தேதி கன்னிமார் கோயில் உற்சவம், 22-ம் தேதி லிங்க பூஜை, 23-ம் தேதி கும்ப பூஜை நடந்தது.

இந்த திருவிழாவின் முத்தாய்ப்பாக சுவாமி பூப்பலக்குத் திருவிழா நேற்று(மார்ச் 24) கோலாகலமாக நடைபெற்றது. முடுவார்ட்டியில் இருந்து பூப்பலக்கில் ஸ்ரீகாட்சியம்மன், செல்லாயி அம்மன் கோயில் வரை வேட்டைக்குப் போகும் இந்த திருவிழாவை ஆயிக்கணக்கான பக்தர்கள் சாமி தரினம் செய்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா நடைபெற்றதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முடுவார்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி சேலைக்காரி அம்மன்கள் உற்சவமும், 26-ம் தேதி அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *