திமுக அரசுக்கு கவுன்டவுன் தொடங்கி விட்டது: நயினார் நாகேந்திரன் கணிப்பு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான கவுன்டவுன் இன்றோடு தொடங்கிவிட்டது. கூடிய விரைவில், திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *