
கவிஞர் மனோந்திரா எழுதும் ‘எளிதாக இலக்கணம் கற்கலாம்’ என்ற புதிய தொடர்.
கவிஞர் மனோந்திரா எழுதும் ‘எளிதாக இலக்கணம் கற்கலாம்’ என்ற புதிய தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது.
தமிழ் ஊடக உலகில் மாற்று ஊடகமாக மலர்ந்துள்ள மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளம், செய்தி ஊடகம் என்ற தளத்தை தாண்டி இலக்கிய மணம் பரப்பும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புகள் நாளை (மார்ச் 1) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும்.
அந்த வகையில், தமிழகத்தின் முன்னணி படைப்பாளியான விருதுநகர் ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’ தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது. தடம் பதித்த தமிழ் சிறுகதைகளைக் கொண்டாடும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த தொடர் இனி ஒவ்வொரு வாரம் -ஞாயிற்றுக்கிழமை வெளிவருகிறது. அதே போல எழுத்தாளர் ச.சுப்பாராவ் எழுதும் ‘நினைவே சங்கீதம்’ எனும் இசைத்தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது. தமிழ் திரையிசை கொண்டாடும் இந்த தொடர் இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வெளிவருகிறது.
தமிழின் தொன்மையைக் காக்கும் வகையில் எளிதாக இலக்கணத்தை அறிமுகப்படும் முயற்சியில் மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் மிகச்சிறந்த மரபுக் கவிஞரான கவிஞர் மனோந்திரா எழுதும் ‘எளிதாக இலக்கணம் கற்கலாம்’ என்ற புதிய தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது. ஒரே நாளில் மூன்று முத்தான மூன்று படைப்பாளிகளின் படைப்புகளோடு மதுரை செய்தி (maduraiseithi.in) நாளை வெளியாகிறது. புதிய புதிய படைப்பாளிகளுடன் ஒவ்வொரு ஞாயிறும் இலக்கிய மணம் வீசும் வகையில் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறது.



