
மழை ( கோப்பு படம்)
தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ( பிப்ரவரி 26) இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதே போல நாளையும் (பிப்ரவரி 27), நாளை மறுநாளும் (பிப்ரவரி 28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



