கரூரில் 41 பேர் பலியான சம்பவம்… டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்... டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
செந்தில் பாலாஜி.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு தவெக பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மூன்று முறை ஆஜரானார். கரூர் சம்பவம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரும் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார். கரூர் சம்பவத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 17) ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *