சர்வதேச அளவிலும் தமிழக மாணவர்கள் சாதனை படைப்பார்கள்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2025-ஆம் ஆண்டிற்கு நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்பவரி சுவே
இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் முதல்வன் திட்டம் 2.O பற்றி நான் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.

நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த வெர்சன் எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள். நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *