அடுத்தடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…தேர்தல் ஆணையம் அதிரடி ஆக்‌ஷன்

இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி, சேலம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், மதுரை, தாம்பரம் போலீஸ் கமிஷனர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு நிரந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாதது தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பதில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்துள்ளது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தூத்துக்குடி ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, விஷ்ணு மஹாஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்‌ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அதிரடியாக ஆட்சியர்கள், டிஜிபி ஆகியோரை மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *