அண்ணாமலையை ஓரங்கட்டிய பாஜக: வேட்பாளர்கள் பட்டியலில் நயினார், வானதி, தமிழிசை

அண்ணாமலை

இன்று வெளியிடப்பட்ட தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக,. அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த முறை 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவிற்கு இந்த முறை 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், அதிமுக கூட்டணியில் கோவை வடக்குத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க பாஜக விரும்பியது. ஆனால், கோவையைத் தவிர வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியிடப்பட்டது. இதில் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்:

  1. ஆவடி – ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்
  2. மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தர்ராஜன்
  3. தளி – நாகேஷ் குமார்
  4. திருவண்ணாமலை – ஏழுமலை
  5. ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்
  6. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்
  7. உதகமண்டலம் – போஜராஜன்
  8. அவிநாசி (தனி) – எல்.முருகன்
  9. திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
  10. கோவை வடக்கு – வானதி சீனிவாசன்
  11. திருவாரூர் – கோவி. சந்துரு
  12. தஞ்சாவூர் – முருகானந்தம்
  13. கந்தர்வக்கோட்டை (தனி) – உதயகுமார்
  14. புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
  15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
  16. திருப்பத்தூர் – திருமாறன்
  17. மானாமதுரை (தனி) – பால கணபதி
  18. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்
  19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
  20. ராமநாதபுரம் – நாகேந்திரன்
  21. திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
  22. வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி
  23. ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
  24. நாகர்கோவில் – காந்தி
  25. குளச்சல் – சிவக்குமார்
  26. பத்மநாபபுரம் – ரமேஷ்
  27. விளவங்கோடு – விஜயதரணி

இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *