
வெயிலின் தாக்கம்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயிலின் அளவு படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நாளை மறுநாள் முதல் மார்ச் 9-ம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மார்ச் 10-ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும் (மார்ச் 5), நாளையும் (மார்ச் 6) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



