திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்!

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டிடயன் முன்னிலையில் கையெழுத்தானது. கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொகுதிகளை குறைத்து வழங்க திமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *