அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் டிரம்ப்: அதிர வைக்கும் சர்வே முடிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் 40 சதவீத அமெரிக்கர்கள் உள்ளதாக சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, டிரம்பின் இறக்குமதி கொள்கை அவருக்கு பெரும் பின்னடவை கொடுத்துள்ளது. டிரம்ப் விதித்த இறக்குமதி வரி கொள்கைகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கருத்து கணிப்பு
இதற்கு முன்னதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை அண்மையில் சர்வே நடத்தின. இதில், டிரம்ப் பணவீக்கத்தை கையாள்வதில் தோல்வியடைந்து விட்டதாக 65 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் மட்டுமே டிரம்பின் இந்த கொள்கையை ஆதரித்துள்ளனர்.

டிரம்பின் மீது அதிருப்தி
மேலும் டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62 சதவீத மக்கள் அங்கீகரிக்கவில்லை. அத்துடன் டிரம்பின் குடியேற்றக் கொள்கையை 58 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குடியேற்றக் கொள்கைக்காக அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்தும் டிரம்பின் திட்டத்திற்கு 54 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57 சதவீத மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்பின் குடியரசுக் கட்சி கட்சி என 33 சதவீதம் பேரும், ஜனநாயகக் கட்சி என 31 சதவீதம் பேரும், யாருமில்லை இல்லை என 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். Yahoo மற்றும் YouGov நடத்திய சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் டிரம்ப் என 40 சதவீத அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர். அத்துடன் டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், 12 சதவீதம் பேர் மட்டுமே டிரம்பை சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர் என்று சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *