தவாக தலைவர் வேல்முருகன் அண்ணன் நெய்வேலியில் போட்டி!

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் திருமால்வளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால், கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை திமுக பேச்சுவார்த்தைக்குழு ஏற்கவில்லை. இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் நேற்று (மார்ச் 22) அறிவித்தார்.

இந்த நிலையில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவராக திருமால்வளவன் உள்ளார். இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் திருமால்வளவன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *