வாடிப்பட்டி அருகே பயங்கரம்… மின் வயர் அறுந்து விழுந்து இருவர் பலி

வாடிப்பட்டி அருகே மின்வயர் அறுந்து விழுந்து கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தெத்தூர் நாராயணபுரத் தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் ( 55) இவர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது தம்பி மகன் ஸ்ரீ என்ற ஸ்ரீகிருஷ்ணன் (20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று ( மார்ச் 6) காலை ஆதி நாராயணனும், அவரது தம்பி மகன் ஸ்ரீ என்ற ஸ்ரீ கிருஷ்ணனும் இவர்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் மாட்டுத் தீவனம் அறுத்துக் கொண்டிருந் தனர். அப்போது திடீரென காற்று அடித்து மின்வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. இதனால் அவர் ஐய்யோ என்று சத்தம் போட்டார். இதைக் ம் கேட்டு அருகில் இருந்த ஆதி நாராயணன் மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி (79) ஆகியோர் ஸ்ரீ கிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால், அதற்குள் மின்சாரம் தாக்கி ஆதிநாரயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணா, சின்ன தம்பி இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது வழியில் ஸ்ரீ கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் முதியவர் சின்னத்தம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *