
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம். அடுத்தபடம்: பிரதமர் மோடி
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. ஆனால், தங்களின் காதலை வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை. ஆனால், திரைப்பட நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாகவே கலந்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நேற்று நடைபெற்றது. இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திருமண வாழ்த்து அனுப்பியிருந்தார். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு திரையுலகினரும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு சென்ற தம்பதியர், பிரதமரிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர்.



