‘அறிவாலயம் பக்கம் நிழலுக்கு ஒதுங்கினாலும்’… முதல்வரை கிண்டல் செய்த விஜய்!

தவெக தலைவர் நடிகர் விஜய்

அறிவாலயம் பக்கத்துல யாரு நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், ” மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாத்தையும் நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்குச் சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமா வந்தது தான் நம்ம டிவிகே.
.
நான் வந்து உங்களை எல்லாரையும் நேர்ல சந்திக்கணும். நீங்க இருக்கிற ஊருக்கே வந்து உங்கள சந்திக்கணும் அப்படின்றது தான் எனக்கு மனசுல இருக்குற ஒரு பெரிய ஆசை. நம்மளோட ஆட்சி அமைந்ததும். ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்களை எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்னு உருட்டுனாரு. இப்ப நடப்பது தமிழ்நாடுக்கும் டெல்லிக்குமான ஒரு மோதல்னு சொல்றீங்க. இன்னும் கொஞ்சம் மேல போய் தமிழ்நாடுக்கும், என்டிஏவுக்குமான ஒரு மோதல் அப்படின்னு சொல்றீங்க. என்ன சார் டெல்லியில எதாவது நிக்கப்போறீங்களா?

உண்மையில இந்த எலக்சன் எதுக்கான எலக்சன்னு சொல்லட்டுமா? தமிழ்நாடு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும், இந்த நிர்வாகத்தை சரியா செய்யாத இந்த திமுக அரசுக்கும் நடக்கிற போர். அதாவது தமிழ்நாடு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இன்னும் சுருக்கமா சொல்லணும்னா. விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இதுக்கு நடுல என்ன என்டிஏ, டெல்லி இதென்ன? இதெல்லாம் என்ன லாஜிக்ன்னு புரியமாட்டேங்குது சார்.. தமிழ்நாடு தான் விஜய். இந்த விஜய் தான் தமிழ்நாடு. தூய சக்தி டிவிகேவுக்கும், தீயசக்தி டிஎம்கேவுக்கும் தான் இந்தப் போர்.

எனக்கு அரசியல் தெரியலைனு சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியலன்னு சொல்ற மாதிரினு. என்னை அசிங்க அசிங்கமா பேசினால் அது மக்களை அசிங்கமாக பேசுற மாதிரினு.. எனக்கு எதிராக செய்ற ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரா செய்ற செயல்னு அவங்களுக்குத் தெரியாமல் போச்சு..இந்த விஜயும், மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜயும், மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி. உடலும் உயிரும் மாதிரி ஒண்ணுலிருந்து ஒன்னு பிரிக்கவே முடியாது.
எனக்கு ஒரு புது ஃபிரண்ட் புது நண்பர் ஒருத்தர் கிடைச்சு இருக்காரு. யாரு தெரியுமா? தெரியாதா? முதல்வர் அவர்கள்தான். இப்ப ஒரு நிருபர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் எல்லாம் யாரும் இல்ல. அவங்க எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான் அப்படின்னு சொன்னாங்களே. அப்படி நாங்க எல்லாம் உங்களுக்கு நண்பர்கள்னா, அப்புறம் ஏன் சார் கரூர் விஷயத்துல என் மேல பழியை தூக்கி போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அப்படி பேசிட்டு இருப்பீங்களா?

மக்களே, இந்தத் தீயசக்தி இந்த அட்ராசிட்டிக்கு ஒரு என்டுகாடு போடணும். அப்படின்னா. அவங்கள சுவிட்ச் ஆஃப் பண்றது தான் ஒரே சொல்யூஷன். அதுக்கான ரிமோட் தான் வரப்போற எலக்சன். அந்த ரிமோட்ல நீங்க அழுத்த வேண்டிது ஒரே ஒரு ஆப்ஷன். அது தான் நம்ம விசில் சின்னத்தோட பட்டன். இந்த நாலு விஷயத்தை நீங்கச் செஞ்சாலே போதும். ஒவ்வொரு ஈவிஎம் மெஷின்லயும் விசில் சின்னத்துக்கு நேரா இருக்குற அந்தப் பட்டனை பச்சக்கு பச்சக்கு பச்சக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க.. எப்படி? அவ்ளோ தான்” என்று பேசினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *