நத்தம் விஸ்வநாதனுக்கு செக் வைப்பாரா செல்வக்குமார்?

திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார் களமிறங்குவதால் பெரும் பரபரப்பு கூடியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்சிக்கு நத்தம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் மூன்று முறை வெற்றி வாகை சூடியுள்ளார். ஆனால், ஏற்கெனவே 1977 முதல் 1966-ம் ஆண்டு வரை இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசம் தான் இருந்தது. இதன் பின் 1996-ம் ஆண்டு தமாகா வசமானது.

இதன் பின் 2001-ம் ஆண்டுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 2016-ம் ஆண்டு திமுக வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆண்டி அம்பலம் ஆறு முறை வெற்றி சாதனை படைத்தவர். இந்த தொகுதியில் முத்தரையர் சமூக வாக்குகள் அதிகம் என்பதால், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான கே.கே.செல்வகுமாரை இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் திமுக களமிறக்குகிறது. நத்தம் விஸ்வநாதன், ஐந்தாவது முறை வெற்றியை நோக்கி தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *