
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
ஆட்சிக்கு வந்தால் ரூ. 5,000, ரூ.10,000 தருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தால்தானே இதை கொடுக்க முடியும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ” மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ. 5,000, ரூ.10,000 தருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தால்தானே இதை கொடுக்க முடியும். சென்னை திமுகவின் கோட்டை என்று கூறி வருகிறார்கள். ஆனால், இன்னும் 50 நாட்களில் அந்த எண்ணம் உடைந்து போகும்.
தவெகவினர் இவ்வளவு நாள் உழைத்தது முக்கியமல்ல, தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டம். 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் நிற்பார்கள். அதில், 170 முதல் 180 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். உங்களை யாராவது மிரட்டினாலோ உங்கள் மீது யாராவது கை வைத்தாலோ அடுத்த நிமிடமே நம்முடைய கட்சியினர் 2, 000 பேர் அங்கு வருவார்கள், எனவே நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றார். இந்த கூட்டத்தில் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



