திமுக, அதிமுக கூட்டணி சாத்தியமில்லை: டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

திமுகவும், அதிமுகவும் கூட்டணிக்கு சாத்தியமில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 118 என்ற எண்ணிக்கை வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியது. சில நிபந்தனைகளுடன் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. ஆனாலும் போதுமான எண்ணிக்கை இல்லாததால் விசிகி, இ.கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் இன்று (மே 8) நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆளுநர் அர்லேகரும் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கையுடன் திமுக, அதிமுக இணைந்து வந்தால் ஏற்பேன் என்றும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்ற தகவல் இரண்டு நாட்களாக பரவி வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ” அது சாத்தியம் என்று நான் கருதவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் இரு எதிர் துருவங்கள். சிலர் இடையில் வந்து செல்வார்கள். அதனால், திமுகவும் அதிமுகவும் கூட்டணி வாய்ப்பு இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்கப்பபோவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்து செய்யும் பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *