தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சிறைத் துறைக்கு அதிரடியாக மாற்றம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். கூட்டணி கட்சியினரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய ஆட்சி அமைந்ததையடுத்து தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையில் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோர், சிறைத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர், குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *