மதுரையில் வீடு புகுந்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது

பிரபல யூடியூபர் மாரிதாஸை வீட்டுக்குள் புகுந்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் வசித்து வருகிறார். பாஜக ஆதரவாளரான இவர், முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்களை யூடியூப்பில் விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்ட புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்று புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையில் இருந்த மாரிதாஸை கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரைக்கு இன்று ((ஜூன் 8)) வந்தனர். மதுரை கோ.புதூர் போலீஸார் உதவியுடன் மாரிதாஸ் வசிக்கும் வீட்டைச் சுற்றி வளைத்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார், அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து மாரிதாஸை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *