‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்

‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான ‘கிரீன் மேஜிக்’ பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும் – ‘கிரீன் மேஜிக்’ பால் உட்பட – தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *