குட்கா கறைகளைக்கூட நீக்கும் வாஷிங் மெஷின்: தவெக மீது கனிமொழி எம்.பி விமர்சனம்

பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற வாஷிங் மெஷின் தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற வாஷிங் மெஷின் ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே, உண்மையா”? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *