
விடாது பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதனால் 12-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு இன்று(ஜூலை 7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.



