
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நான்கு வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று (ஜூலை 7) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுபோல வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளும், நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



