இன்னும் 12 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா : அதிர்ச்சி கொடுக்கும் ஆர்.பி.உதயகுமார்!

இன்னும் 12 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், ” இன்றைக்கு இந்தியாவிலேயே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் காவிரியில் 32 டிஎம்சிதண்ணீரை கர்நாடகா ஜூலை மாதத்திற்காக திறந்து விட வேண்டும் ஆனால் தண்ணீரை திறந்து விடாத காரணத்தால், மேகதாது அணைக்கட்ட ஆயத்தப்படுகிறது ஆரம்பித்திருக்கிற காரணத்தால், டெல்டா பகுதி கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதனால் ஆழ்ந்த கவலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.

முல்லைப் பெரியாறு புதிய அணையை கட்டுவது தொடர்பாக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கிற கேரளா அரசு தமிழக அரசோடு முரண்பட்டு நிற்கிறது இதனால் ஆழ்ந்த துக்கத்திலே கவலையிலே நம்முடைய தென் மாவட்ட விவசாயிகள் உள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு காண அரசுக்கு கடமை காத்துக் கொண்டுள்ளது அத்துடன் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையையும் உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அத்துமீறி போய்க்கொண்டிருப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. இதற்கெல்லாம் சமூகத் தீவு காண்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்த மக்களுக்கு, தலையில் பேரிடியாக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட இன்றைக்கு தமிழக நலனுக்காக கடந்த 52 காலமாக அயராது உழைத்து வருகின்ற அதிமுகவை மக்களிடத்தில் இருந்து தனிமைப்படுத்தும் அந்த சூத்திரத்தை அரகேற்றி வருகிறார்கள்.

சாமானிய பொதுச்செயலாளராக மக்கள் பணியாற்றி வருகிற எடப்பாடியாரை எப்படியாவது மக்கள் பணியில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று ரகசிய திட்டத்தின் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தொடர் ராஜினாமா செய்ய வைத்து இன்றைக்கு குதிரை நேரத்தில் தன்னுடைய அரசின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார்கள். தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைக்க தவெக வேண்டிய பெரும்பான்மையை நிரூபிக்க வீரமணியை நேரில் சந்தித்ததை தொடர்ந்து எதிரி என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலினை நேரிலே சந்தித்து, தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரிலே சென்று பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து குறிப்பாக திமுக தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்ததோடு இதுவரை பார்த்து விடாத அன்பையும். பாசத்தையும் பூமழை பொழிகிற வகையிலே விஜய் பரிமாறிக் கொண்டதை இந்த நாடு பார்த்தது.

அத்துடன் அமைச்சர் பதவி ஆசைகாட்டி அதிமுக குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதோடு, கழகத்தின் பொதுச்செயலாளரே சந்திக்காமலே அரசியல் மரபுகளை மீறி சட்ட திட்டவிதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சில பேரை மட்டும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சந்தித்தது அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் என்று விஜய் கூறி பரபரப்பான செய்தி இதை நினைக்கிற போது ஆடு பகை ,குட்டி உறவு என்கிற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தொடர்ந்து அவருடைய அரசியல் சித்து விளையாட்டுகள் எடுபடாமல் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும் பொதுச்செயலாளரோடு இனி ஒன்றாக இணைந்து மக்கள் பணியை தொடர போகிறோம் என்ற முடிவை எடுத்த போது அதிர்ந்து போல விஜய் அவர்கள் அதிரடியாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தூக்கி ராஜினாமா அரங்கேற்றம் செய்தார் இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் 12 பேர்கள் வரை ஆட்டத்தை தொடர்வார் என்ற செய்திகள் வெளி வருகின்றன. தேர்தல் நேரத்திலே மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை அல்லு ,சில்லுகள் என்று ஆணவத்தின் உச்சியிலே விஜய் விமர்சித்ததை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிமுகவை தமிழ் நாட்டு மக்களிடத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கும் , எடப்பாடியாரை எப்படியாவது தனிமைப்படுத்த வேண்டும் என்ற விஜய்யின் ரகசிய திட்டம் தான் என்ன என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை.

அதிமுகவை தனிமைப்படுத்தி விட்டால் தவெக கட்சியை தேசிய அளவிலே வளர்த்து விடலாம் என்று எடப்பாடியாரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால் காலம் இப்படியே போய்விடாது. காலம் மாறும் அப்போது காலம் மாறுகிறபோது அரசியலிலே கடும் பின்னடைவுகளை விஜய் சந்திக்கிற தீர்ப்புகளும் வரும். விஜய் ஒன்றும் அவதார புருஷனும் அல்ல ஆபத்பாந்தவனும் அல்ல அவர் தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளும் அல்ல. காலம் தந்த தீர்ப்பிலே அவருக்கு முதலமைச்சர் அரியாசனம் கிடைத்திருந்தாலும் தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *