தேர்தல் நடந்தால் விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்: வைகோ நம்பிக்கை

தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் நடந்தால்; விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட், முல்லைப்பெரியாறு, சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி வருகிறேன்.

தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்த போது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தடை வாங்கப்பட்டது. மேகதாது அணை பிரச்னைக்கு எதிராகவும் கட்சி பாகுபாடின்றி போராடினோம். தமிழ்நாடு அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்க கால கோரிக்கை. ஆனால், நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படி செயல்படுத்த முடியும்? கல்வி நிறுவனங்கள் தொடங்க கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயை த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார்.

தற்போதைய சூழலில் தவெக தலைமையிலான கூட்டணியில் ம.திமுக இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம்”. என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *