
கரூரில் களத்தில் நின்றது யார், மக்களைத் தவிக்க விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் மீது பழியைப் போடுவதாக தவெக தலைவர் விஜய் கரூரில் இன்று பேசியிருந்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதற்கு திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,” கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், முதலமைச்சர் விஜய் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பொறுப்புடன் நடந்து கொள்ள விரும்புவதால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், கரூரில் களத்தில் நின்றது யார்? மக்களைத் தவிக்க விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியம்.
மேலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எங்கெல்லாம் ஆய்வுக்கூடாதோ, அங்கெல்லாம் ஆய்வு செய்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளின் மனதைப் புண்புடுத்தும்படி நடந்து கொள்கிறார்கள். இந்த ஆட்சி எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவில்லை” என்றார்.



